புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமிக்க இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, விரைவில் 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர்.
durai

சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 39 நீதிபதிகள் உள்ளனர். 36 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 19 வக்கீல்கள், 11 மாவட்ட முதன்மை நீதிபதிகள் என்று 30 பேரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது.

இந்த 30 பேரில், 9 வக்கீல்கள், 6 மாவட்ட முதன்மை நீதிபதிகள் என்று 15 பேரை ஐகோர்ட்டு நீதிபதியாக முதல் கட்டமாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசும் பரிந்துரை செய்தன. இந்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, வக்கீல்கள் ஆர்.பார்த்தீபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.எஸ்.ரமேஷ், அனிதா சுமந்த், ஜே.நிஷாபானு, ஜி.கோவிந்தராஜ், மாவட்ட முதன்மை நீதிபதிகளான, டி.ரவீந்திரன் (ஐகோர்ட்டு தலைமை பதிவாளர்), எஸ்.பாஸ்கர் (ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளர்), பி.வேல்முருகன் (ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளர்), ஜி.ஜெயசந்திரன் (சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி) ஏ.எம்.பஷீர்அகமது, புதுச்சேரி மாவட்ட நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீதித்துறையின் மரபுபடி புதிய நீதிபதிகளின் பெயரை இந்தி மொழியில் எழுதி ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கவேண்டும். இதற்கான ஆவணங்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆவணங்களில், 15 புதிய நீதிபதிகளும் நேற்று தங்களது பெயரை இந்தியில் எழுதினார்கள். பின்னர், தலைமை நீதிபதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து, இந்த ஆவணங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அடுத்த சில தினங்களில், இந்த 15 பேரையும் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்றும் இவர்கள் அனைவரும் விரைவில் நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் ஐகோர்ட்டு வட்டாரத்தில் கூறப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top