முசாபர் நகர் கலவரத்தில் மாயமானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம்;அகிலேஷ் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு முன்னின்று  நடத்திய கலவரத்திற்கு பிறகு உ. பி யில்தான் அது போன்ற பேரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்திற்கு பின் நின்று இயக்கியது பிஜேபி அரசு என்ற குற்றச்சாற்று உண்டு. முசாபர்நகர் கலவரம் வரலாற்றில் மறக்கமுடியாதது.  முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவ வழங்க அகிலேஷ் யாதவ் அரசு இப்போது முன் வந்துள்ளது. முசாபர்நகர் கலவரத்தின் போது மாயமான 18 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று உத்தர பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 2013 ஆம்  ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்து, முஸ்லிம் இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான மக்கள் கலவரத்துக்கு பயந்து கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 50 ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடங்களைவிட்டு பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தேர்தல் நலன் கருதிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top