பான்பாசிபிக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது சானியா ஜோடி

பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக். குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இறுதிச்சுற்றில் சீனாவின் சென் லியாங் – ஜாவ்ஸுவான் யங் ஜோடியை எதிர்கொண்ட சானியா ஜோடி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சானியா-பர்போரா ஜோடி கனடாவின் கேபிரில்லா டேப்ரோஸ்கி-ஸ்பெயினின் மரியா ஜோஸ் ஜோடியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top