‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ஆரம்பமாகியது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ,கைலாசபதி அரங்கில், ‘யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’, ஆரம்பமாகியது. யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன், முக்கிய  விருந்தினராகக் கலந்துகொண்டார். விழா ஆரம்பத்தில்,

பறை இசை முழக்கப்பட்டது. யாழ்பாணத்தின் அடையாளமான யாழ் சின்னத்தின் முன்பு  விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு விழா ஆரம்பமானது. ஈழத் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றுக்கு இசையமைத்த மூத்த இசைக் கலைஞர் கண்ணனின் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அது வந்திருந்தவர்களுக்கு விருந்தாக அமைந்தது.opening film – ஆரம்பக் காட்சியாக ‘Void’ என்னும், Lebanese film –[written by Georges Khabbaz and directed by seven different directors ]  ஜியார்ஜ் ஹப்பாஸ் எழுதி,  ஏழு இயக்குனர்களால் இயக்கப்பட்ட லெபனான் நாட்டுத் திரைப்படம்  காட்டப்பட்டது. ஏழு குறும்படங்களின் இணைப்பான இத்திரைப்படம் அதிகார சக்திகளால் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களைப் பற்றிய மையக் கருப்பொருளைக் கொண்டதாக இருந்தது. இக்காலசூழலுக்கு ஏற்ற திரைப்படமாக அமைந்தது, எல்லோராலும் பாராட்டப்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top