ஓசூரில் ‘விஸ்வ ஹிந்து பரிசத்’அமைப்பினருக்குள் தகராறு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டனர்

கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சூரி என்பவர் ‘விஸ்வ ஹிந்து பரிசத்’ மாவட்ட செயலாளாராக இருந்தார்.கடந்த 19 ந்தேதி இரவு நேரு நகர் பகுதியில்  உள்ள கலால் போலிஸ் ஸ்டேஷன் அருகே கொல்லப்பட்டார்.நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டார். இந்த கொடூர கொலை குறித்து போலிஸ் தீவிர விசாரணை செய்தது. ஏனென்றால், தமிழ் நாட்டில் இந்து முன்னணியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதும் உடனே இஸ்லாமிய அமைப்பை குற்றம் சாற்றுவது இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதால், போலிஸ் உடனே விசாரிக்க துவங்கியது. எப்போதும் தமிழ் நாட்டு போலிஸ் இது போன்ற கொலைகள் நடக்கும் போது இந்து முன்னணியினர் சொல்வதற்கு முன்பே இரண்டு அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்து தங்களை காத்துக்கொள்வார்கள்.இந்த நிலையில் சூரியை கொலை செய்ததாக போச்சம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் ஓசூரை சேர்ந்த பாபு ,சாஜித்பாஷா,கஜேந்திரன் ஆகிய மூன்று பேர் சரணடைந்தனர்.கடந்த ஆண்டு இதே கிருஷ்ணகிரியில் விஸ்வ ஹிந்து பரிசத் பிரமுகர் மகேஷ் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார்,அவர் கொல்லப்படும் போது அவருடன் இருந்த அதே இந்து அமைப்பை சேர்ந்த நபருக்கும் வெட்டு விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் அப்போது அவர் ‘’நான் உயிரோடு பிழைத்தால் இவர்களை பழிவாங்குவேன்’’ என்று எச்சரிக்கை விட்டிருந்தார்.  அவர் தான் இப்போது சரணடைந்து  இருக்கும் கஜா  என்கிற கஜேந்திரன்.இந்த கொலையின் பின்னணி.  ‘விஸ்வ ஹிந்து பரிசத்’ அமைப்பினருக்குள் இருக்கும் அதிகாரம்  அல்லது ரியல் எஸ்டேட் வகை சண்டை,அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா ஆனால் இவர்கள் சண்டையில் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும்தான்.சமீபத்தில் கோயம்புத்தூரில் நடக்கும்  கலவரம் எல்லோருக்கும் தெரிந்ததே.’’இதற்கு ஒரே தீர்வு பொதுமக்கள் இது போன்று ஒரு சம்பவம் நடக்கும் போது தீர்மானமாக தெருவில் நின்று போராடவேண்டும்.இவர்களுக்கு எதிர்த்து ஒன்றுதிரண்டு குரல் கொடுக்க வேண்டும்’’என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top