ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

201609241306503978_12-killed-in-militant-attacks-north-of-iraq-tirkit_secvpf

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின.

இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியின்மீது இன்று ஒரு காரில் வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 4 போலீசார் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னர் வேகமாக தப்பிச் சென்ற அந்த காரில் இருந்த ஒருவன் அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்ற பின்னர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கியதில் அந்தக்கார் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் அவ்வழியாக சென்ற 8 பேர் பலியாகினர், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top