தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த அதிகாரி வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ சோதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த அதிகாரி வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் போக்குவரத்து மேலாளராக இருப்பவர் ராஜேந்திரன். தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு, மதுரை அருகேயுள்ள அனல்மின் நிலையத்துக்கு கொண்டு சென்றதில் முறைகேடு கள் நடந்ததாக இவர் மீது புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது. புகார் தொடர்பாக சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top