கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநருடன் சந்திப்பு

காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ஆளுநர் வாஜூபாய் ஆர் வாலாவை சந்தித்தார்.

k4

தமிழகத்துக்கு செப்.21 முதல் 27-ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்.20) உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து விவாதிக்க பெங்களூரு விதானசெளதாவில் புதன்கிழமை காலை 11 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா,  காவிரிப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா, இன்று ஆளுநர் வாஜூபாய் ஆர் வாலாவை சந்த்தித்தார். அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்து தீர்மானம் எடுப்பதற்காக செப்.23-ஆம் தேதி காலை 11 மணிக்கு சட்டப்பேரவை மற்றும் மேலவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட கோரிக்கை வைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top