உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சோனியா காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் கர்நாடகத்தில் நிலவும் அசம்பாவிதங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் சித்தராமையா, கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர்விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை விளக்கியுள்ளார்.
மாநிலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு, இன்று புதன்கிழமை உறுதியான முடிவை மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு கட்சி மேலிடம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிரான செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த சர்வோதயா கர்நாடக கட்சியின் மேல்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் புட்டனையா, மண்டியா மக்களவை உறுப்பினர் சி.எஸ்.புட்டராஜு ஆகியோர் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top