காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து மத்திய மந்திரி சபை இன்று ஆலோசனை

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய மந்திரி சபை இன்று (புதன்கிழமை) ஆலோசிக்கிறது.
302302

காஷ்மீர் மாநிலம் உரி நகரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே உள்ள ராணுவ முகாம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது

இதில் 18 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். ராணுவம் நடத்திய பதிலடியில் தாக்குதலில் நாலுபேர்  கொல்லப்பட்டனர். எளிதில் நுழைய முடியாத ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருப்பது நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ள சக்திகளை ஒடுக்குவது குறித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி பாரிக்கர், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் ராஜ்நாத் சிங் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக், வெளியுறவுச் செயலாளர், துணை ராணுவ படை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை மற்றும் ‘ரா’ போன்ற முகமைகளின் அதிகாரிகள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக தூதரக ரீதியான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டது. மேலும் உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குறிப்பிட்ட அளவிற்கு, பல அடுக்குகள் கொண்ட ராணுவ தாக்குதலை மேற்கொள்வது பற்றியும் அரசு தரப்பில் திட்டம் தீட்டப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய பாகிஸ்தானின் அடையாளச் சின்னங்கள் பதித்த ஆயுதங்கள், உணவு, ஊட்டச்சத்து பான பொருட்கள், ஜி.பி.எஸ். கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர். இதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தாக்குதல் நடத்தியது யார் என்பதை உறுதி செய்தவுடன் அது பற்றிய ஆவணங்கள் தொகுப்பை பாகிஸ்தானிடம் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி இந்தியா முறைப்படி கோரிக்கை விடுக்கும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top