நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சிரமம் சித்தராமையா.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவது சிரமம் என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (செப்.21) முதல் வரும் 27-ஆம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. அதையே வழங்க முடியாத

என்ற நிலை உள்ள போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவது மிகவும் கடினம். இந்த நிலையில், புதன்கிழமை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த சாதக, பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும்.
மேலும், பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மக்களவை உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கப்படும். காவிரி படுகையில் உள்ள விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். அமைதியான

முறையில் தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பேட்டியின் போது, அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top