ஒரு நாளைக்கு 2 கோடி அழைப்புகள் துண்டிக்கப்படுகிறது; ஏர்டெல் நிறுவனம்தான் காரணம் ஜியோ குற்றச்சாட்டு

ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் படி புதிய தொடர்பு முறைகளை வழங்குவதாக அறிவித்தது. மேலும் இந்த தொடர்பு முறைகளை வெளியிட வேலைசெய்து வருவதாகவும் கூறியது.. இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முடிவை வரவேற்கிறோம். பரிந்துரைத்ததை விட தொடர்பு முறைகளை ஏர்டெல் நிறுவனம் குறைவாக வெளியிடுகிறது ஏர்டெல் என  ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

air

ஒரு நாளைக்கு 2 கோடி அழைப்புகள் துண்டிக்கப்படுவதற்கு ஏர்டெல் நிறுவனம்தான் காரணம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இரண்டு நெட்வொர்க்குக்கும் இடையே தற்போது உள்ள டிராபிக் வேகத்தின் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் தொடர்பு முறைகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் தேவையான தொடர்பு முறைகளை விட நான்கில் ஒரு பங்கு குறைவாகவே ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு நாளும் இரண்டு நெட்வொர்க்கு இடையில் 2 கோடிக்கும் மேலான அழைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

90 நாட்கள் சேவையில் தரத்தில் குறைபாடுகள் இருந்தால் நிவர்த்தி செய்வது குறித்து எந்தவொரு விதிகளையும் டிராய் வழங்கவில்லை. இந்த விஷயத்தில் டிராய் தலையிடுவது அவசியமாக உள்ளது. இவ்வாறு ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் பார்தி ஏர்டெல் நிறுவனம் கூடுதல் தொடர்பு முறைகளை வழங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு விட்டோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சேவையின் தரம் தொடர்ந்து குறைவதால் சந்தாதாரர்கள் பாதிப்படைகின்றனர். அதுமட்டு மல்லாமல் இந்திய வாடிக்கையாளர்கள் இலவச அழைப்புகளையும் மற்ற சேவைகளையும் பயன்படுத்துவதற்கு தடையாக உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இது போன்ற நடவடிக்கைகள் போட்டி மனப்பான்மையே காட்டுகிறது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இருந்த போதிலும் ஏர்டெல் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற ரிலையன்ஸ் விரும்புகிறது. இந்த பிரச்சினைகளை உடனடியாக களைந்து வாடிக்கையாளருக்கு மிகச் சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top