கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 5-ம் வகுப்பு மாணவி பலி

201609191005135219_karur-near-private-school-van-collide-student-death_secvpf

கரூர் அருகே உள்ள காளியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள்கள் லத்திகா (வயது 10), ஜோஷிகா (3). இவர்கள் இருவரும் தற்போது அவரது தாத்தா ரத்தினம் வீட்டில் வளர்ந்து வந்தனர்.

இதில் லத்திகா கானியாளம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் அவரது தாத்தா ரத்தினம் பேத்தியை தனது மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வருவது வழக்கம்.

அதேபோல் இன்று காலை தனது பேத்தி லத்திகா பள்ளிக்கு மொபட்டில் அழைத்து சென்றார். அப்போது மற்றொரு பேத்தியான ஜோஷிகாவும் உடன் சென்றார். வழியில் பின்னால் அசுர வேகத்துடன் வந்த தனியார் பள்ளி வேன் திடீரென மொபட் மீது மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த லத்திகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ரத்தினம் மற்றும் ஜோஷிகா இருவரும் பலத்த காயத்துடன் போராடிக் கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மாணவி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பொது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top