மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிபெற வேண்டும்;பசுமைத்தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

supreme

மெட்ரோ ரயில் நிறுவனம், டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா நிறுவனம் ஆகியவை, தங்களின் அனைத்துத் திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதிச் சான்று பெற வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார். “மெட்ரோ ரயில், டெடிகேட்டட் பிரைட் காரிடார்ஸ் போன்ற நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மாசுகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் எனக் கூறுவது பொருத்தமற்றது” என வாதிட்டார்.

மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டப்பணிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெறத் தேவையில்லை என்ற சில அரசு அறிவிக்கைகளையும் மனுதாரர் தரப்பு மேற்கோள் காட்டியது.

இதைத்தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top