டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

இந்தியாவுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆஃப் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதன் மூலம் வெற்றியை உறுதி செய்தது.

nadal
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-மார்க் லோபஸ் ஜோடி 4-6, 7-6 (2), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சாகேத் மைனேனி ஜோடியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் தோற்றதால், டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளைப் பெற்ற தனியொரு வீரர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டார் பயஸ். தற்போதைய நிலையில் பயஸýம், இத்தாலியின் நிகோலாவும் அதிக வெற்றி பெற்றவர்கள் வரிசையில் (42 வெற்றி) முதலிடத்தில் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் சம்பிரதாயத்துக்காக மட்டுமே விளையாடப்படுகின்றன. அதனால் இந்தியாவின் இளம் வீரரான சுமித் நாகலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top