10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு 3 மதிப்பெண்!

sslc examபத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு 3 மதிப்பெண் வழங்க தமிழக தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி நடந்த பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதி கேள்வி எண் 14ல், “ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில் ஆடியின் வகை என்ன?” என கேட்கப்பட்டது.

இதற்கு ‘குவிலென்ஸ்’ என்பது விடை. ஆனால் ‘குழிலென்ஸ்’ என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில், தமிழ் வழி கேள்வி எண்.29ல் “வாகனங்களில் பயன் படுத்தப்படும் எரிபொருள் யாவை …… ?” என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில் பயோ–பியூல் என கேட்டு தமிழ் வழி கேள்வித்தாளில் ‘உயிரி எரிபொருள்’ என கேட்காமல் பொதுவாக கேட்டு விட்டனர்.

இதற்கு மாணவர்கள், பெட்ரோல்–டீசல் என விடை எழுதினர். இதனால் மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில் இந்த கேள்விக்கும் 2 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top