மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

man

இரண்டாம் உலகப்போர் முடிந்து, 1946 ல் Nuremberg  ல் போர்க்குற்ற விசாரணை நடந்தது. அதில் ஜெர்மனியின் Bayer நிறுவனம் குற்றவாளிக்கூண்டில் நிருத்தப்பட்டது.  போர்க்குற்ற விசாரணை ஆணையத்தின் முதன்மை வழக்கறிஞர் ” இந்த நிறுவனங்கள் சித்த சுவாதீனமில்லாத நாஜிபடை வெறியர்கள் அல்லர், ஆனாலும் இவர்களே முதன்மை குற்றவாளிகள். தங்களை வெளிப்படுதிக்கொள்ளாமல் இனப்படுகொலையில் பங்கேற்ற இவர்களை இப்பொழுது தண்டிக்காவிட்டால் எதிர் காலத்தில், இப்பொழுது ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையை விட மிக மோசமாக மனிதர்களை வேட்டையாடுவார்கள்” என்று கூறினார். ஜெர்மனியின் Bayer நிறுவனம் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டது.

யூதர்களை இனப்படுகொலை செய்த ‘Death camps” என்றழைக்கப்படும் மரணமுகாம்களுக்கு கொடிய நச்சான சயனைடு கலந்த “Zyklon B” எனும் நச்சுவாயுவை தயாரித்து அனுப்பியது இந்த நிறுவனமே. ஒரு நாளைக்கு சராசரியாக 6000 பேர் இந்த நிறமில்லாத வாயுவை வலுக்கட்டாயமாக சுவாசிக்க வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பின்பு அவர்களின் சடலங்களை எரிப்பதற்கு மெத்தனால் வேதிப்பொருளையும் இந்த நிறுவனமே தயாரித்து அனுப்பிவைத்தது.

இன்று இந்த Bayer நிறுவனம் உலகின் முன்னணி மருந்து மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். நீரிழிவு நோய்க்கான மருந்துகளையும், கருத்தரித்தல் தொடர்பான அனைத்து மருந்துகளையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனம்.

இந்த நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளையும் , அதன் மூலம் விவசாயத்தையும் கட்டுப்படுத்தும்’ அமைப்பாக வளர்ந்துள்ள “Monsanto” மான்சாண்டோ நிறுவனத்தை தன்னுடன் இணைத்துள்ளது. இது உலகெங்கும் உள்ள சுற்றுசூழல் மற்றும் மனிதஉரிமை செயல்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏன்னெனில் இன்றுவரை உலகின் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களை ஆறு மிகப்பெரும் நிறுவனங்களே கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த இணைப்பின் மூலம் உலகின் கால்வாசிக்கும் மேலான விவசாயம் தொடர்பான விதைகள், பூச்சிமருந்துகள் மட்டுமல்லாது மனிதர்களின் உடல்நலன் அனைத்தும் இந்த இரண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் . நாம் உண்ணும் உணவு முதல் அனைத்தும் இவர்களே தீர்மானிப்பார்கள். உலகமயமாதலின் விளைவு நம் வீட்டு உணவு வரை விசத்தை விதைத்து நுழைந்து விட்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top