மும்பையுடன் பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து அணி நிதான பேட்டிங்

201609161211568716_new-zealand-team-batting-against-mumbai-in-practice-match_secvpf

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று புதுடெல்லியில் தொடங்கியது.

டாஸ் ஜெயித்த மும்பை அணி கேப்டன் ஆதித்ய தாரே பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மார்டின் குப்தில் டாம் பதம் களம் இறங்கினர்கள். அந்த அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து இருந்தது. மும்பை அணியில் பல்வந்தர் சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை அணியில் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள அவர் பயிற்சி ஆட்டத்தில் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமாகும். அப்போது தான் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top