கோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன்

201609161119558745_indian-crickets-future-bright-under-virat-kohli-says-gary_secvpf

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிரிஸ்டன். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரராக அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் கேரி கிரிஸ்டன் அளித்த பேட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து உள்ளார். அவர் கூறியதாவது:-

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது டிரசிங் ரூம்மில் அற்புதமான சூழ்நிலை இருக்கும். இதுதான் இந்திய அணி சாதிக்க உதவியாக இருந்தது.

விராட் கோலி ஆட்டத்தை ரசித்து பார்த்து வருகிறேன். ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும், வெற்றிகரமாக முடிப்பதிலும் அவர் ஆர்வமாக உள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

ஐ.பி.எல். போட்டி இளம் மற்றும் திறமையான வீரர்கள் கண்டறிய உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top