ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டுக்காரரரை சீன அரசு விடுவித்தது

201609161125256661_china-deports-canadian-kevin-garratt-detained-two-years-on_secvpf

சீனாவில் ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டு தம்பதியரில் கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தாய்நாட்டுக்கு திரும்பினார்.

கனடா நாட்டின் வான்கூவர் நகரைச் சேர்ந்த கெவின் கார்ட் மற்றும் அவரது மனைவி ஜூலியா ஆகியோர் கடந்த 1984-ம் ஆண்டுமுதல் சீனாவில் தென்கொரியா நாட்டு எல்லைப்பகுதியில் காபிக்கடை நடத்தி வந்தனர். மேலும், கிறிஸ்தவ மதம்சார்ந்த பிரசாரத்திலும் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

கனடா நாட்டு உளவுத்துறைக்காக சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை உளவுப்பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் இந்த தம்பதியரை சீன உளவுத்துறையினர் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கனடா நாட்டின் அழுத்தத்தின்பேரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜூலியா மட்டும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெவின் கார்ட் விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top