வன்முறைக்கு பயந்து தமிழர்கள் வெளியேறியதால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு

பெங்களூரில் கடந்த 12-ந்தேதி நடந்த கலவரம் மற்றும் வன்முறை காரணமாக இங்கு வசித்து வந்த தமிழர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

varius-works-affected-in-karnataka-after-tamils-fled-in-fear_secvpf
10 லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் ஆட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

இதனால் பெங்களூர் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படாமலும், எரிக்கப்படாமலும் கிடக்கின்றன.

மேலும் ஒட்டு மொத்த தொழில்களுமே கர்நாடகாவில் முடங்கி உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top