ஐதராபாத் மெட்ரோ ரெயில் திட்ட பகுதியில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

9a09a49d-e62d-4d12-8326-25576922c2f6_S_secvpfஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் லாரி கவிழ்ந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

மாலக்பேட் பகுதியில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக தோண்டப்பட்டிருந்த மிகப்பெரிய பள்ளத்திற்குள் இன்று அதிகாலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குண்டூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு மெட்ரோ ரெயில் பணி நடந்த பள்ளத்திற்குள் விழுந்தது.

இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் லாரிக்கடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர். டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top