குஜராத் வளர்ச்சி மாநிலம் என்பது மாயை: ஜெயலலிதா கடும் தாக்கு!

jeyaகுஜராத் மாநிலம்தான் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் முதலமைச்சரும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ”குஜராத் மாநிலம்தான் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தைவிட அனைத்து துறைகளிலும் அதிக வளர்ச்சி கண்டுள்ளது தமிழகம்.

வாஜ்பாய் ஆட்சியில் நதிகளை இணைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை இணைக்க அரசு 100.97 கோடி ரூபாய் ஒதுக்கியது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை காங்கிரஸ் அரசு நிராகரித்துவிட்டது.

நதிகள் இணைப்புக்கு தேவையான 6,500 கோடி ரூபாயை வழங்க தயார் என பா.ஜ.க. கூறுமா? மகாநதி-கோதாவரி-காவிரியை இணைக்க பா.ஜ.க. உத்தரவாதம் அளிக்குமா? காவிரியில் தமிழகத்திற்கான நீரை பெற்றுத்தர பா.ஜ.க. உறுதிமொழி தருமா? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top