போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

போலீஸ் ரோந்து வாகனத்திற்குத் தீ வைக்க முயன்ற இளைஞர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.

men-make-their-way-past-a-burning-lorry-which-was-set-on-fire-by
பெங்களூரு நாயண்டஹள்ளியில் திங்கள்கிழமை நடந்த கலவரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது இளைஞர்கள் கும்பல், தாக்குதல் நடத்தி, தீ வைக்க முயற்சி மேற்கொண்டது.
இதனையடுத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீப் (25), யோகேஷ் (22), ராஜேஷ் (35), உமேஷ் (25) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி உமேஷ் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உமேஷ், பெட்ரோல் பங்க் ஊழியர். வேலை முடிந்து எக்கனஹள்ளியில் உள்ள வீட்டுக்குத் திரும்பும்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top