பொள்ளாச்சியில் கேரள வனத்துறை அலுவலகம் முற்றுகை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 20 பேர் கைது

பரம்பிக்குளம் அணைப் பகுதி தமிழக கேரள எல்லையில், கேரளத்திற்குள் அமைந்துள்ளது.  இதை சுற்றியுள்ள பகுதிமக்கள் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அந்த பகுதி குழந்தைகளின் படிப்பிற்காக பள்ளி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் வாகனத்திற்கு டிரைவர் நியமித்து, டீசல் செலவு, வாகன பராமரிப்பு செலவு போன்றவற்றை தமிழக பொதுப் பணித்துறையே செய்து வருகிறது.

12

இந்த நிலையில், பொதுப் பணித்துறை சார்பில் இயக்கப்பட்டுவந்த பள்ளி பஸ்சுக்கு அனுமதி வழங்க முடியாது என கேரள பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் ரஜ்சன்குமார் தெரிவித்து விட்டார்.மேலும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அவமானப்படுத்தவும் இதை தட்டி கேட்ட பொதுமக்கள் மீது தடி அடி நடத்தவும் செய்தனர் கேரளா வனத்துறை அதிகாரிகள்

11

பள்ளி குழந்தைகளை பரீட்சை எழுத அனுமதிக்காததை கண்டித்தும்

பரம்பிக்குளம் அணைப் பகுதியில் பணியாற்றச் சென்ற *தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளையும், அந்தப் பகுதி தமிழ் மக்களையும் கண்மூடித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய கேரள வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரைக் கண்டித்தும்
பொள்ளாச்சியில் இயங்கி வரும் கேரள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டது   தந்தை பெரியார் திராவிட கழகம்.

தந்தை பெரியார் திராவிட கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top