கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

201609120744430611_deve-gowda-inspects-krs-other-reservoirs-in-cauvery-basin_secvpf

கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கர்நாடகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக மண்டியாவில், 7-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு சென்று ஹெலிகாப்டரில் இருந்தபடியே அவற்றின் நீர் நிலைமைகளை ஆய்வு செய்தார். மேலும் அந்த அணைகளின் நீர்ப்பாசன பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கே.ஆர்.எஸ். அணை முன்பு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்று, எவ்வளவு நீர் இருப்பு உள்ளது, எவ்வளவு திறந்துவிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் தேவேகவுடா அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு நடப்பது அவசியமாகும். அது மாநில அரசின் கடமையும் கூட. காவிரி பிரச்சினை தொடர்பாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கர்நாடகத்திற்கு வாதாடும் மூத்த வக்கீல் நாரிமனுடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துள்ளேன். அவர் சரியான முறையில் வாதாடி வருகிறார். அவர் இங்குள்ள நீர் நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து பிரதமருக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top