சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது

201609120746106066_water-levels-at-least-in-lakes-provide-drinking-water-to_secvpf

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். புழல் ஏரியின் உயரம் 21.20 அடி. 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். சோழவரம் ஏரியின் உயரம் 17.86 அடி. 881 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். ஆக 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

இந்த நிலையில் கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் மேற்கண்ட 4 ஏரிகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top