பஞ்சாப்பில் விவசாயிகளுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியை தொடர்ந்து அடுத்த கட்டமாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆம் ஆத்மி கட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

aap-releases-kisan-manifesto-in-punjab_secvpf

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி முதல் கட்சியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மோகா என்ற இடத்தில் இதற்கான நிகழ்ச்சியில் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், விவசாயிகளுக்கான 31 திட்டங்கள் உள்பட பல்வேறு ‌அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கும் திட்டமும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் தற்கொலைகளை தடுப்பதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.

முதியோர்களுக்கான பென்ஷன் ரூ.500-லிருந்து ரூ.2000 ஆயிரமாக உயர்த்தப்படும். மாநிலம் முழுவதும் மானியங்கள் மற்றும் வங்கி கடன்கள் மூலமாக 25 ஆயிரம் பால் பண்ணைகள் அமைக்கப்படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top