சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள் முதல் வழித்தடப் பணிகள் நிறைவடையும் என தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் நிறுவும் பணிகள் 2017ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

metro-rail

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னையில், ரூ.19,000 கோடி முதலீட்டில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மெட்ரோ ரயில் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை, கிண்டி வழியாக, மீனம்பாக்கம் விமான நிலையம் வரை, சென்னை கடற்கரையில் இருந்து, அண்ணா நகர், கோயம்பேடு வழியாக, பல்லாவரம் வரையும் 2 கட்டங்களாக பாதை நிறுவப்படுகிறது.

இதில், முதல்கட்ட திட்டத்தின்கீழ், கோயம்பேடு முதல் கிண்டி வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை நிறுவப்பட்டு, 2015ம் ஆண்டு ஜூன் முதலாக, மெட்ரோ ரயில் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி, இந்த ரயில் சேவையை, 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதே வழித்தடத்தில் மேலும் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு, வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் வரை மெட்ரோ பாதை நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான முதல்கட்டப் பணிகள், 2017ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என்றும், அதற்கடுத்த சில மாதங்களில் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்றொரு வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 வழித்தடப் பணிகளும் நிறைவடைந்து, மெட்ரோ ரயில் சேவை முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்போது, சராசரியாக, தினமும் 7.5 லட்சம் மக்கள் அதனை பயன்படுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top