விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

201609111412573800_mallya-pmla-case-ed-to-attach-fresh-assets_secvpf

டெல்லி நீதிமன்றத்தில் தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் விடுக்கும் பணிகளை அமலாக்கப்பிரிவு தொடங்கியுள்ளது.

வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ. 8,041 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது. இப்போது மூன்றாவது முறையாக விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துக்களை குறிவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி (பிஎம்எல்ஏ) மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் கூறிஉள்ளனர். விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) ஜூனில் அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய் மல்லையாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இதுவரையில் அமலாக்கப் பிரிவு முன்னதாக மல்லையா ஆஜராகவில்லை.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜய் மல்லையாவிற்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கான பணிகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்று தெரியவந்து உள்ளது.

சர்வதேச போலீஸ் மூலமாக விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும் முயற்சியில் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்யவும் அமலாக்கப்பிரிவு முன்வந்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top