பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

201609091957152904_super-singer-pragathi-debut-bala-movie_secvpf

‘தாரை தப்பட்டை’ படத்துக்குப்பின் விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர்களை வைத்து ‘குற்ற பரம்பரை’ கதையை இயக்கப்போவதாக பாலா அறிவித்திருந்தார்.

‘குற்ற பரம்பரை’ கதையை படமாக்குவதில் பாலா, பாரதிராஜா இருவருக்கும் மோதல் வெடித்தது. இதில் பாலாவை முந்திக்கொண்டு ‘குற்ற பரம்பரை’ படத்துக்கு பாரதிராஜா பூஜை போட்டார்.

இதனால் ‘குற்ற பரம்பரையை’த் தள்ளிவைத்து முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க பாலா திட்டமிட்டார். இதற்கான நடிக, நடிகையர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் படத்தின் நாயகனாக சாட்டை யுவனையும், நாயகியாக சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியையும் பாலா ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தனது ‘பரதேசி’ படத்தின் மூலம் பிரகதியை பாடகியாக அறிமுகபடுத்திய பாலா தற்போது நடிகையாகவும் அவரை அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top