அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம்

201609091710471997_appukutti-marrige-under-ajiths-presence_secvpf

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, தற்போது நடித்தவரும் ‘தல 57’ வரை அவருடன் சேர்ந்து நடித்து வருபவர் சிவபாலன் என்கிற அப்புக்குட்டி. தனக்கு மிகவும் பிடித்துவிட்ட நடிகரான அப்புக்குட்டிக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக, அப்புக்குட்டியை வைத்து தனியாக போட்டோ ஷுட் ஒன்றையே நடத்தியவர் அஜித். அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறு அவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார் அஜித்.

இந்நிலையில், அப்புக்குட்டிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டிவரும் அப்புக்குட்டி, அந்த வீடு கட்டி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.

அவரது சொந்த ஊரில் அவருக்கு பெண் வேறு பார்த்துவிட்டார்களாம். ஒருமுறை அஜித்தை நேரில் சந்தித்தபோது, தனது திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம் அப்புக்குட்டி. அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டாராம். கூடியவிரைவில், அஜித் தலைமையில் அப்புக்குட்டியின் திருமணம் நடக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top