விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்

201609110240470901_earthquake-in-perambalur-cuddalore-villupuram_secvpf

கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடி விவரம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top