நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில்: சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரம்

201609110808457285_metro-rail-tunnel-nehru-park-to-egmore-route-sets-the-signal_secvpf

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழித்தடத்தில் மின்மயமாக்கல், சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற் கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுமார் 7¾ கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

திருமங்கலம்-ஷெனாய் நகர் இடையே சுரங்கப்பாதை வழித்தடத்தில் 5 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஷெனாய் நகர்-நேரு பூங்கா இடையே பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேரு பூங்கா-எழும்பூர் இடையே தண்டவாளம் போடப்பட்டுவிட்டது. மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் இன்னும் பாக்கி உள்ளன.

பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. இதற் கான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாக்கில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு பின்னர் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவார். இதையடுத்து சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதே சமயத்தில் மண் ஆய்வு, விரிவாக்கத்திற்கான மற்ற ஆவண ரீதியான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top