இந்தியாவுக்கு திரும்பி வர முடியாது: விஜய் மல்லையா கோர்ட்டில் தகவல்!

அந்நிய செலவாணி  முறைகேடு வழக்கில் ஆஜர் ஆவதற்காக இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று பிரபல தொழிலதிபர் மல்லையா கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலவாணி முறைகேடு வழக்கில் விஜய் மல்லையா இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம்  மல்லையாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி மல்லையாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் அஜய் பார்கவா மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இந்திய அரசு அதிகாரிகள், மல்லையாவின் பாஸ்போர்ட்டை எந்த வித விசாரணையும் இன்றி ரத்து செய்துவிட்டனர்  என்றும், அதன் காரணமாக அவரால்  தற்போது இந்தியா வந்து விசாரணையில் பங்கேற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top