ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 பேருக்கு மீண்டும் பிணை மறுப்பு

ரேணிகுண்டா  ரயில்  நிலையத்தில்   கைது செய்யப்பட்டு, திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 பேருக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டது.
கடந்த மாதம் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில்  ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த   தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.relations-of-accused-sad-after-32-tamils-arrest-in-andhra_SECVPF
பின்னர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திருப்பதி சிறையில் அடைத்தனர்.
இவர்களை பிணையில் விடுவிக்க தமிழக அரசு சார்பில் அருள், ரியாஸ் ஆகிய இரு வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.
திருப்பதி 6-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் 2 முறை இவர்களுக்கு பிணை மறுக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மூன்றாவது முறையாக பிணை கோரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ், “32 பேர் மீதும் புதிய வனத் துறை சட்டப் பிரிவின் கீழ் பிணையில்லா வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது’ என தீர்ப்பளித்தார்.
திருப்பதி நீதிமன்றத்தில் 3 முறை பிணை மறுக்கப்பட்டுள்ளதால், இனி பிணை பெற உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்ய முடியும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top