ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

BABYதிருவண்ணாமலை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை 25 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் கிடாம்பாளையம் என்ற கிராமத்தில் துரை என்பவரின் 2 வயது குழந்தை சுஜித், அந்த பகுதியில் ஜெயபால் என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில், நேற்று மாலை 4 மணியளவில் தவறி விழுந்தது.

160 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 45-வது அடியில் குழந்தை சிக்கி இருந்தது

முன்னதாக ரோபோ மூலம் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றை தோண்டி குழந்தையை வெளியில் எடுக்கும்பொழுதே குழந்தை உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த குழுவினர், நவீன ரோபோ கருவிகளைக் கொண்டு குழந்தையை மீட்கப் போராடினர். அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, ஆழ்துளைக் கிணறை தோண்டி குழந்தையை சடலமாக மீட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top