தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நெல்லை பல்கலைக்கழகத்தை முற்றுகை

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

fees-to-reduce-college-students-siege-of_secvpf

இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்வுக்கு கட்டணம் ரூ.55-ல் இருந்து ரூ.90-ஆக உயர்த்தப்பட்டது. பட்டமேற்படிப்புக்கு ரூ.106-லிருந்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று நெல்லை பல்கலைகழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து பல்கலைகழகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மதியம் 11 மணியளவில் பல்கலைக்கழகம் முன்பு 3 மாவட்ட மாணவர்கள் திரண்டனர். மாநில செயலாளர் உச்சிமகாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் நெல்லை விஜய், தூத்துக்குடி உய்காட்டான், குமரி சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தேர்வு கட்டணத்தை குறைக்க கோரி ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் கமி‌ஷனர் திருஞானம், துணை கமி‌ஷனர் பிரதீப்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக நெல்லை- தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top