மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்: ராமேசுவரத்தில் பல கோடி வருவாய் இழப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் பல  கோடி ரூபாய்  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

3012

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 114 படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இப்போராட்டம் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 12 முதல் தங்கச்சி மடத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 5 ஆயிரம் தொழில்முறை மீனவர்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல் சார் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதனால் பல கோடிக்கு மேல்  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top