கர்நாடாக நீர்பாசன அமைச்சர் வீடு முற்றுகை

காவிரி நீர் திறப்பு குறித்து வல்லுநர்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் 15,000 கன அடி நீர் 10 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடகாவில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கடும் எதிர்ப்பு ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஒட்டுமொத்த கர்நாடகாவும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு விவசாயிகள் கொந்தளிப்புடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து வல்லுநர்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top