இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரான  ராஜூ முருகன் இன்று காலை தனது நீண்டகால தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை ‘திடீர்’ திருமணம் செய்து கொண்டார்.

rajumurugan wedding

தமிழ் சினிமாவில் குக்கூ படம் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். சமீபத்தில் வெளியான  இவரது ஜோக்கர் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டை பெற்று நன்றாக ஓடி வருகிறது.

இரண்டு படங்களை  மட்டும் இயக்கியுள்ள போதும், தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் வரிசையில் ராஜு முருகன் இடம் பெற்றுள்ளார்.

இவர் இன்று காலை சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை ‘திடீர்’ திருமணம் செய்து கொண்டார். நெருக்கமான நபர்கள்மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மிகவும்  எளிய முறையில் இந்த திருமணம் நடந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top