அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா, போபண்ணா முன்னேற்றம்; வெளியேறினார் பயஸ்!

அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா, போபண்ணா ஆகிய இருவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு வீரரரான பயஸ்   தோல்வியடைந்து வெளியேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள்  அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடைபெற்று வருகின்றன. அதில் இன்று நடைபெற்ற ஆட்டங்களில், மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, செசன்யாவின் பார்பரா ஸ்ட்ரைகோவா இணை 6-2, 7-6 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்து-அமெரிக்க இணையான விக்டோரிஜா கொலுபிக்-நிக்கோல் மேலிக்கர் இணையை தோற்கடித்தது.

அதே போல் ஆடவர் இரட்டையர் போட்டியில் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் கேபிரியலா தப்ரோவ்ஸ்க்கி இணை போலந்து-செசன்ய நாட்டு இணையான லுகாஸ் கோபோட்-ஹன்ரியா லவகோவா   இணையை 5-7, 6-3, 10-7 என்ற கணக்கில் தோற்கடித்தது.

அதே நேரத்தில் கலப்பு  இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் , ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை, தர வரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ராஜீவ் ராம், கோகோ வண்டெவெஹ் இணையிடம் 6-7, 6-3, 11-13 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

ஏற்கனெவே பயஸ் இரட்டையர் போட்டியில் தோல்வியடைந்து உள்ளதால், இந்த தோல்வியோடு பயஸின் அமெரிக்க ஓபன் பயணம் முடிவுக்கு வந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top