மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆகிறது 524 பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியிலேயே தொடக்கக்கல்வி

Tamil-schools-in-Malaysia-is-the-language-of-200-years_SECVPF

மலேசியாவில் 524 பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியிலேயே தொடக்கக்கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அந்நாட்டு அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாட உள்ளது.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி 200 ஆண்டுகள் ஆவது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமையும், பூரிப்பையும் அளிக்கக்கூடியது ஆகும். 1,816–ம் ஆண்டு முதல் மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கி வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்துக்கு வெளியே, வேறு எந்த நாட்டிலும் இந்த பெருமையான செயல்பாடு இல்லை.

தேசிய கல்வி திட்டத்தில் 524 தமிழ் பள்ளிகளில் தமிழ்மொழி மூன்றாம் நிலை பாடமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலும் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கல்லூரிகளில் இளங்கலை பட்டம் முதல் முதுகலை, முனைவர் பட்டம் வரை அரசாங்க ஆதரவோடு தமிழ் மொழியை கற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு அடுத்தபடியாக மலேசியாவில் உள்ளது என்பது உலக தமிழர்களுக்கு மலேசிய அரசு வழங்கியிருக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

மேலும் மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைமுறையில் இருக்கும் தமிழ் மொழி பாடத்திட்டம், சுவிட்சர்லாந்து நாட்டு தமிழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக வழங்கப்படுகிறது.

இத்தகைய வகையில் மலேசிய நாட்டில் தமிழ் மொழி அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. தமிழ்க்கல்வி தொடங்கப்பட்ட 200 ஆண்டுகளை மிக பெரிய அளவில் கொண்டாடும் வகையில் மலேசிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கொண்டாட்டத்தை வழிநடத்தி உதவி புரிந்து வலுப்படுத்தும் வகையில் சர்வதேச ஆலோசனை குழுவை நியமித்து இருக்கிறது. இந்த ஆலோசனை குழுவில் ‘தமிழரசி’ மாதம் இருமுறை தமிழ் இதழின் ஆசிரியர் ம.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதத்தை ம.நடராஜனுக்கு மலேசியா நாட்டு கல்வி அமைச்சக துணை அமைச்சர் கமலநாதன் பஞ்சநாதன் அனுப்பியிருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top