முருகப்பா கோப்பை ஹாக்கி: ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே அணிகள் வெற்றி

90-ஆவது முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் ஐஓசி, ஏர் இந்தியா, ரயில்வே ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

hokey

எம்.சி.சி.-முருகப்பா குழுமம் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியும், ஐஓசி அணியும் மோதின.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஐஓசி அணி 2-ஆவது நிமிடத்திலேயே கோலடித்தது. இந்த கோலை ரகுநாத் அடித்தார். தொடர்ந்து 10-ஆவது நிமிடத்தில் பிராப்ஜோத் சிங்கும், 13-ஆவது நிமிடத்தில் சஞ்சயும் கோலடிக்க, அந்த அணி 3-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 33-ஆவது நிமிடத்தில் பிராப்ஜோத் சிங் தனது 2-ஆவது கோலை அடிக்க, ஐஓசி 4-0 என முன்னிலை பெற்றது. மறுமுனையில் திணறிய தமிழக அணி 45-ஆவது நிமிடத்தில் கோலடித்தது. இந்த கோலை ஹசன் பாஷா அடித்தார். அதற்குப் பதிலடியாக 50-ஆவது நிமிடத்தில் ஐஓசியின் தீபக் தாக்குர் கோலடித்தார். இறுதியில் ஐஓசி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

2-ஆவது ஆட்டத்தில் இந்திய ரயில்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவ லெவன் அணியைத் தோற்கடித்தது. ரயில்வே தரப்பில் அமித் ரோஹிதாஸ் (17), தல்விந்தர் சிங் (37), அஃபான் யூசுப் (44), ஜே.பி.குஷ் (55) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். ராணுவ அணி தரப்பில் ஜானி ஜாஸ்ரோஸியா (24) ஒரு கோலடித்தார். 3-ஆவது ஆட்டத்தில் ஏர் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை ஹாக்கி சங்க அணியைத் தோற்கடித்தது. ஏர் இந்தியா தரப்பில் அர்ஜுன் சர்மா (27), ஜோகா சிங் (40), ரெஹ்மான் (46) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

இன்றைய ஆட்டங்கள்

ஓஎன்ஜிசி-கர்நாடகம்

நேரம்: பிற்பகல் 2.30

பஞ்சாப் & சிந்து

வங்கி-இந்திய ரயில்வே

நேரம்: மாலை 4.15

பிபிசிஎல்-மும்பை

நேரம்: மாலை 6


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top