அம்பானியின் பாக்கெட்டுக்குள்தான் மோடி இருக்கிறார் கெஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோடி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பர மாடலாக மாறி விட்டதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

eep-modelling-for-Reliance-kejriwal-advise-to-modi_SECVPF

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்னும் பெயரில் அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக,

நாளிதழ்களில் தலைப்பு பக்கங்களில் முழுபக்க அளவில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன.

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய அந்த விளம்பரங்களில் ‘பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவை ஜியோ நனவாக்கும்’ என்ற வாசகம்

இடம்பெற்றிருந்தது.

இந்த விளம்பரம் வெளியானதும், தனியார் நிறுவன தயாரிப்பை ஒரு நாட்டின் பிரதமர் எப்படி ஆதரிக்கலாம்? என்ற பாணியில் தனது டுவிட்டரில் கேள்வி

எழுப்பியுள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ‘மோடி அவர்களே!, நீங்கள் ரிலையன்ஸ் விளம்பரங்களின் மாடலாக மாறி விடுங்கள். உங்களுக்கு

உழைப்பாளிகள் வரும் 2019-ம் ஆண்டு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அம்பானியின் பாக்கெட்டுக்குள்தான் மோடி இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடும் முன்னதாக உரிய அனுமதி வாங்க வேண்டும். பிரதமரின் அனுமதி இல்லாமல் தனது விளம்பரத்துக்கு பயன்படுத்திய

ரிலையன்ஸ் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அஜய் மக்கான்

கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top