சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டடுவதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்; கூட்டத்தொடர் நிறைவு பெற்றது .

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2016–2017–ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து உரையாற்றினார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை இடம்பெற்றது.

2365

அதன்பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்களின் காரசாரமான கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்தனர். முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 110-வது விதியின் கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

பரபரப்பான இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இடம்பெறுவதாக தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டியதுடன், அவ்வப்போது வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். சட்டசபையில் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவ்வாறு உறுப்பினர்களின் காரசாரமான விவாதங்கள், கேள்வி-பதில் மற்றும் பல்வேறு சட்ட முன்வடிவுகள் ஆகிய நிகழ்வுகளுடன் சுமார் ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து சட்டமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடைசி நாளான இன்று பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top