முன்னாள் அதிபர் ராஜபக்சே தம்பி கோத்தபய மீது மீண்டும் ஊழல் வழக்கு

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே (67). இவர் அவரது அமைச்சரவையில் ராணுவ மந்திரி ஆக இருந்தார்.

39

ராஜபக்சே பதவி பறிபோனதும் இவர் மீதும், குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே மீது மீண்டும் ஒரு ஊழல் வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டது. இவர் ராணுவ மந்திரி ஆக இருந்த போது காரே துறைமுகத்தில் இருந்து மிதக்கும் ஆயுத கிடங்கு நடத்தினார். இது தனியாருக்கு காண்டிராக்ட் விடப்பட்டிருந்தது. இங்கிருந்து படகில் ஆயுதங்கள் எடுத்து சென்று எதிரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த காண்டிராக்டை தனியாருக்கு விட்டதன் மூலம் அரசுக்கு ரூ500 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறி இவர் மற்றும் 7 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top