ஜப்பானில் நிலத்தடி நீரில் அணுக் கதிர்வீச்சு; அடுத்த ஒலிம்பிக் நடப்பதில் சிக்கல்?

சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடந்த முடிந்துள்ளது .அடுத்து ஒலிம்பிக் ஜப்பானில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் நடத்துவதில் புதிய சிக்கல் எற்பட்டுள்ளது.

jabb

மார்ச் 11,2011 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு நிலையம் இன்று வரை அதன் மையத்தை நெருங்க இயலாமல் அணுக்கதிர் வீச்சை வெளியிட்டு கொண்டே இருக்கின்றது . அதை கண்டறிய அனுப்பப்பட்ட 5 இயந்திர ரோபாட்களும் அணுக்கதிர் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் செயலிழந்து உள்ளேயே நின்றுவிட்டன.

கடலின் அருகில் இந்த அணு நிலையத்தை அமைத்தால் வெளிவரும் கழிவு நீரை கடலுக்குள் செலுத்திவிடலாம் என்ற திட்டத்தின் படியே அமைக்கப்பட்டது.[தமிழ் நாட்டில் கூடங்குளத்திலும் அது போலவே அமைத்திருக்கிறார்கள்] அதன் 6 அலகுகளும். சுனாமி பேரழிவில் சிக்கி சின்னாபின்னமான பின்பு விழித்துக்கொண்ட ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவை அனைத்தும் எதிர் பார்த்த பலனை தரவில்லை. இந்த நிலையில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துவதற்கு ஜப்பான் தயாராகிக்கொண்டிருக்கும் வேலையில் ஜப்பான் நாட்டின் நிலத்தடி நீரை பற்றிய அச்சம் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் நாடுகளுக்கு வந்திருக்கிறது.

ஏனெனில் , புகுஷிமா அணு நிலையத்தில் உருகி கொண்டிருக்கும் அணுக்கதிர் உலைகளில் ஏற்கனவே சுனாமியில் உட்புகுந்த கடல் நீர் கதிரியக்கம் பெற்ற நீராக மாறி அதன் நிலத்தடியில் செல்லும் நன்னீர் நிலத்தடிநீரில் கலந்து கொண்டிருக்கிறது. கதிரியக்கம் கலந்த நீர் இதுவரை 1000 கொள்கலன்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இது  ஒலிம்பிக் போட்டிகளின் நீச்சல் குளங்களின் அளவில் இதுவரை சேகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு தொடர்ந்து செய்ய இயலாத நிலையில் ஒரு மாபெரும் தொழில் நுட்பத்தை எடுத்து சோதித்து கொண்டிருக்கிறது ஜப்பான்.

புதிய தொழில்நுட்பத்தில், புகுஷிமா அணு உலையை சுற்றிலும் நிலத்தடியில் மிகப்பெரிய பனிசுவரை எழுப்பிக்கொண்டிருக்கிறது. இந்த பனிசுவர் செயல்பாட்டிற்கு வரும்பொழுது அணுஉலை அமைந்திருக்கும் இடத்தை சுற்றிலும் நிலத்தடிநீர் உட்புகாது. மேலும் அணுஉலை உள்ள பகுதியில் அடியில் ஊடுருவி இருக்கும் கதிரியக்க நீரும் நிலத்தடி நீருடன் கலக்காது. இதுவரை மிக சிறிய அளவில் மட்டுமே செயல்பாட்டிற்கு நடைமுறையில் உள்ள இந்த தொழில்நுட்பம் இங்கு மிகப்பெரிய அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது.

$320 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரும் பொருட்செலவில் நிலத்தினடியில் 100 அடி ஆழத்திற்கும், மூன்று புறங்களில் 1 மைல் நீளத்திற்கும் எழும்பிக்கொண்டிருக்கும் இந்த பனிச்சுவர் செயல்பாட்டிற்கு வரும்பொழுது நிலத்தடி நீர் அணு உலைக்குள்ளும் , உலையின் நிலத்தடி நீர் பசிபிக் கடலிலும் கலப்பது தடுக்கப்படும். மூன்று அடி இடைவெளியில் 100 அடி ஆழத்திற்கு 1,568 குழாய்கள் நிலத்தினடியில் அமையும். இந்த ஒவ்வொரு குழாயை சுற்றிலும் உள்ள மண் மைனஸ் -30 டிகிரி அளவில் உறையும் படி அதன் குளிர்நிலை கண்காணிக்கப்படும். இந்த பனிச்சுவர் முற்றிலும் உறைநிலை கொண்டு செயல்பட இரண்டு மாதங்களாகும். மிகப்பெரும் 30 குளிரவைப்பான் இயந்திரங்கள் செயல்படும். இந்த அமைப்பிற்கு செலவாகும் மின்சாரத்தைக் கொண்டு 13,000 வீடுகளுக்கு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்கலாம் என்றால் இதன் பிரமாண்டம் விளங்கும்.

ab

இந்தியாவிலும் செயல்படும் அணுஉலைகள் அனைத்தும் கடலுக்கு அருகில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.இது போன்ற நிலை நமக்கு வந்தால் என்னாகும் ?அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக, கேலி செய்தும், கிண்டல் செய்தும் வந்த இந்த சமூகம் இப்போதாவது உணர்வுபெறுமா ?.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top