அடுத்த ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் 20 பதக்கங்களைப் பெறுவார்கள்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் 24 பேர் பங்கேற்று, 20 பதக்கங்களை வெல்வார்கள் என பள்ளிக்கல்வி-விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

OLI

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் புதன்கிழமை பேசினார். அப்போது, விளையாட்டு நகரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் அளித்த விளக்கம்: விளையாட்டு நகரத் திட்டத்தை விட பன்மடங்கு உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான விளையாட்டு வீரர்களை உருவாக்க 10 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி அளிக்க ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த திமுக ஆட்சியைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இப்போது நடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்து ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியே இருக்கும். அப்போது, தமிழகத்தில் இருந்து 24 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் 20 பதக்கங்களையாவது பெற்று வருவார்கள். இதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றார் பாண்டியராஜன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top