தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

suicide-story-647_081716115052

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் ஸ்ரீதர் கிடந்தார்.

இதுகுறித்து வேலைக்காரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீதரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முதலில் ஸ்ரீதர் துப்பாக்கியை சுத்தம் செய்த போது தவறுதலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது வீட்டில் சோதனை செய்த போது ஸ்ரீதர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், மேல் அதிகாரிகள் தன்னை தர குறைவாக பேசியதாகவும், தொல்லை கொடுத்ததாகவும் எழுதி உள்ளார்.

இதனால் ஸ்ரீதர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் தெலுங்கானாவில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார். லஞ்சம் வாங்க அதிகாரிகள் தொல்லை கொடுத்ததால் உயிரை மாய்த்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து இருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top